கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரியில் ‘பல்நோக்கு சிறப்பு சிகிச்சை துறை தொடங்க வேண்டும்’ - பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை

கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரியில் ‘பல்நோக்கு சிறப்பு சிகிச்சை துறை தொடங்க வேண்டும்’ என மத்திய மந்திரி நட்டாவிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-09-10 17:12 GMT
புதுடெல்லி,

மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை–மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மத்திய சுகாதாரத்துறை மந்திரி நட்டாவை நேரில் சந்தித்தார். அப்போது, கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மேம்படுத்தும் வகையில், பல்நோக்கு சிறப்பு சிகிச்சைக்கான துறையை ‘பிரதம மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா’ திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் தொடங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை மந்திரி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக, பொன்.ராதாகிருஷ்ணனிடம் உறுதியளித்தார். இந்த சந்திப்பின் போது கேரள மாநில பாரதீய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் வி.முரளிதரன் உடனிருந்தார்.

மேலும் செய்திகள்