பள்ளிபேருந்து விபத்துக்குள்ளாகி 26 மாணவர்கள் உயிரிழந்த விபத்தில் சிபிஐ விசாரணை கோரி பெற்றோர்கள் போராட்டம்

இமாச்சலபிரதேசத்தில் பள்ளிப்பேருந்து விபத்துக்குள்ளாகி 26 மாணவர்கள் உயிரிழந்த வழக்கில், சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிய பெற்றோர்கள் தர்மசாலா மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். #Dharmsala #District administration

Update: 2018-09-11 05:35 GMT
தர்மசாலா,

கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி இமாச்சலப்பிரதேச மாநிலம் காங்ரா மலைப்பகுதியில் பள்ளிபேருந்து கவிழ்ந்த விபத்தில் 26 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் தர்மசாலா மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். விபத்து குறித்து மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் அளித்த விசாரணை அறிக்கை தங்களுக்கு திருப்தி இல்லை எனக் கூறிய பெற்றோர்கள், உண்மைக்காரணத்தை வெளிக்கொணர வேண்டும் என தர்மசாலா மாவட்ட நிர்வாக அலுவலகத்திற்கு ஊர்ந்து வந்து போராட்டம் நடத்தினர்.

இதனிடையே விசாரணை அறிக்கை மீதான அதிருப்தி குறித்து உயிரிழந்த மாணவரின் பாட்டி கூறுகையில், எங்கள் குழந்தைகளுக்கு நீதி வேண்டும் என்றே நாங்கள் இங்கு வந்துள்ளோம். நிர்வாகம் பல விஷயங்களை மறைக்க முயற்சி செய்கிறது. இந்த வழக்கில் மூன்று முதல் நான்கு வரையிலான துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதை, சிபிஐ அதிகாரிகள் வெளிக்கொணர வேண்டும். விபத்திற்கு காரணமானவர்கள் அனைவரும் கடுமையான முறையில் தண்டிக்கப்பட வேண்டும் எனக் கூறினார். நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையானது உண்மைகளை அடிப்படையாக கொண்டது என மாவட்ட கூடுதல் மாஜிஸ்திரேட் கூறினார். ஆனால், பேருந்து சுவர் மீது மோதியதா அல்லது டிரக் மீது மோதியதா என்பதை அவர் கூறவில்லை. இந்த அறிக்கையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என உயிரிழந்த மற்றொரு மாணவரின் தந்தை நரேஷ் சிங் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்