பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக வழக்கு - டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணை

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக வழக்கு, டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

Update: 2018-09-11 23:30 GMT
புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் ஆகிய அத்தியாவசிய எரிபொருட்களின் விலையை மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் அன்றாட அடிப்படையில் உயர்த்தியோ, குறைத்தோ வருகின்றன. கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக உயர்ந்து உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி ஐகோர்ட்டில் பூஜா மகாஜன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அதில் “பெட்ரோல், டீசல் விலையை அன்றாடம் உயர்த்துவதால், நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மத்திய அரசின் மறைமுக உத்தரவின்பேரில் எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போல் பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தி வருகின்றன.

கர்நாடக சட்டசபை தேர்தலின்போது 22 நாட்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. எனவே பெட்ரோலிய பொருட்கள் மீது நியாயமான அளவில் விலையை நிர்ணயிக்க உத்தரவிடவேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீது இன்று(புதன்கிழமை) விசாரணை நடக்கிறது.

மேலும் செய்திகள்