பாகிஸ்தானில் “சர்ஜிக்கல் ஸ்டிரைக்” நாய்களை விரட்ட பயன்படுத்திய வியூகம் குறித்து முன்னாள் கமாண்டர் பேச்சு

பாகிஸ்தானில் “சர்ஜிக்கல் ஸ்டிரைக்” நடத்திய போது உள்ளூர் நாய்களை விரட்ட பயன்படுத்திய வியூகம் குறித்து முன்னாள் கமாண்டர் பேசியுள்ளார்.

Update: 2018-09-12 09:51 GMT

புதுடெல்லி,


2016 செப்டம்பரில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் அதிரடியாக சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது. பயங்கரவாதிகளின் முகாம்களில் நடத்தப்பட்ட இந்த அதிரடி தாக்குதலில் 40-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மிகவும் துல்லியமாக திட்டமிட்டு தாக்குதலை முன்னெடுத்ததாக அப்போதைய இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பாரிக்கர் கூறினார். இப்போது தாக்குதல் நடத்த ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் செல்லும் போது நாய்களின் தாக்குதல் இருக்கும் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ன செய்தோம் என்பதை முன்னாள் கமாண்டர் பேசியுள்ளார். 

புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் கமாண்டர், லெப்டினல் ஜெனரல் ராஜேந்திர நிம்பார்கார், “கிராமங்கள் வழியாக செல்லும் போது உள்ளூர் நாய்கள் கத்தும் என எங்களுக்கு தெரியும். அவைகள் சிறுத்தைகளுக்கு பயப்படும் என எனக்கு தெரியும். எனவே நாங்கள் சிறுத்தையின் சிறுநீரை எங்களுடன் கொண்டு சென்றோம், அதனை பயன்படுத்தினோம். அதனால் நாங்கள் உள்ளே சென்றபோது எங்களை நாய்கள் அணுகவில்லை,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்