தேசிய செய்திகள்
கரும்புதான் சர்க்கரை நோய்க்கு காரணம், வேறு பயிர்களை பயிரிடுங்கள் விவசாயிகளுக்கு யோகி அட்வைஸ்!

கருப்புதான் சர்க்கரை நோய்க்கு காரணமாகிறது எனவே வேறு பயிர்களை பயிரிடுங்கள் என விவசாயிகளுக்கு யோகி ஆதித்யநாத் அட்வைஸ் வழங்கியுள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் புதிய சாலையை அமைக்கும் பணிக்கு யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசுகையில், “விவசாயிகள் வெறும் கரும்பு மட்டுமே உற்பத்தி செய்யக்கூடாது, வேறு பயிர்களையும் பயிரிடவேண்டும். அதிகமான கரும்பு விளைச்சல், அதிகமான பயன்படுத்தலுக்கு காரணமாகும். இது சர்க்கரை நோய்க்கு காரணமாகும். விவசாயிகள் காய்கறிகளை விளைவிப்பதிலும் அதிகமான கவனம் செலுத்த வேண்டும், இவைகளுக்கு டெல்லி மார்க்கெட்டில் அதிக விலை இருக்கிறது. இப்போது கரும்பு மட்டுமே அதிகமாக விளைவிக்கப்படுகிறது,” என்று பேசியுள்ளார். 

இந்தியாவின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் 38 சதவிதம் உத்தரபிரதேசம் உற்பத்தி செய்கிறது.