ரோஹிங்யா அகதிகளின் பயோ மெட்ரிக் தகவல்களை சேகரித்து அனுப்ப மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு

ரோஹிங்யா அகதிகளின் பயோ மெட்ரிக் தகவல்களை சேகரித்து மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். #RajnathSingh;

Update:2018-10-01 16:38 IST
கொல்கத்தா

மத்திய உள்துறை மந்திரி ராஜ் நாத் சிங் கூறியதாவது:-

ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை இனம் காண மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். அகதிகளின் பயோமெட்ரிக் தகவல்களையும் எடுக்க வேண்டும். இந்த அறிக்கையை மாநிலங்கள், மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். இந்த அறிக்கை அடிப்படையில், மியான்மர் அரசுடன் ராஜாங்க ரீதியில் நடவடிக்கை எடுத்து இப்பிரச்சினைக்கு முடிவுகட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். 

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்