மதுவில் தள்ளாடிய இளம்பெண்கள் போலீசாரிடம் வாக்குவாதம்
மும்பையில் அளவுக்கு மீறி மது அருந்திய 4 பெண்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
மும்பை,
மும்பை மிரா சாலையில் உள்ள மைதானத்தில் 4 பெண்கள் ஒருவருக்கொருவர் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனால் அந்த பகுதியில் கூட்டம் கூடியது. ரோந்து பணியில் ஈடுபட்டிகொண்டிருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது அந்த பெண்கள் ஆண் போலீசாரிடம் மோதலில் ஈடுபட்டனர்.
அவர்களை கட்டுப்படுத்த முயன்ற பெண் காவலர் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் குடிபோதையில் இருந்த பெண்களை சரமாறியாக தாக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றினார். இது தொடர்பாக 3 பெண்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஒரு பெண் தப்பி ஓடிவிட்டார். கைது செய்யப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.