காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

Update: 2019-02-24 22:00 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலத்தில் 40 துணை ராணுவவீரர்களை பலி கொண்ட புலவாமா தாக்குதலுக்கு பிறகு பிரிவினைவாத தலைவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் ராணுவவீரர்களால் ஒடுக்கப்படுவதாக கூறி, அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்த பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்தன.

அதன்பேரில் தலைநகர் ஸ்ரீநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. அதே போல் பெட்ரோல் நிலையங்கள், வங்கிகள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன.

இந்த முழுஅடைப்பு போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்