அரசு வேலைக்கான தேர்வு கட்டணம் ரத்து - ராகுல் காந்தி அறிவிப்பு

அரசு வேலைக்கான தேர்வு கட்டணத்தை ரத்து செய்வோம் என ராகுல் காந்தி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். #RahulGandhi;

Update:2019-04-08 22:36 IST
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி கடந்த 2-ம் தேதி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் பல பிரிவுகளின் கீழ் வாக்குறுதி அளித்திருந்தது. அதில், வேலை பிரிவின் கீழ் சுமார் 20 வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதில் முக்கியமாக, ஏப்ரல் 1, 2019 நிலவரப்படி மத்திய அரசு, நீதித்துறை, நாடாளுமன்றம் ஆகியவற்றில் காலியாக உள்ள 4 லட்ச பணியிடங்கள் 2020 மார்ச் மாதத்துக்குள் நிரப்பப்படும். அரசுத் தேர்வு மற்றும் பதவிகளுக்கான விண்ணப்பப் படிவ கட்டணம் ரத்து செய்யப்படும். வேலைகளை தக்கவைத்துக்கொள்ளவும், புதிய வேலைகளை உருவாக்கவும் காங்கிரஸ் முன்னுரிமை கொடுக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது டுவிட்டர் பதிவில், “இந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைகளுக்கான தேர்வு விண்ணப்ப கட்டணத்தை ரத்து செய்வோம். மக்கள் நலனில் சுகாதார பிரச்சினை முக்கியமானதாக உள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் முழு சுகாதாரம் உரிமையாக்கப்படும். நாட்டின் மொத்த உற்பத்தியில் சுகாதாரத்துக்கான அரசு ஒதுக்கீட்டை 3 சதவீதமாக உயர்த்துவோம்” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்