லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Update: 2019-04-10 07:09 GMT
புதுடெல்லி,

கால்நடைத் தீவன  ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு 14 ஆண்டுகள் சிறை தண்டனையை  ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அனுபவித்து வருகிறார். 

தன் மீதான வழக்குகளில் ஒரு வழக்கில் ஏற்கெனவே ஜாமீன் பெற்ற லாலு, 3 வழக்குகளில் ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரினார். ஆனால் அவரது கோரிக்கையை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் லாலு மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. மனுதாரர் மற்றும் சிபிஐ தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, லாலுவின் ஜாமீன் விஷயத்தில் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறி லாலுவின் ஜாமீன் மனுவை நிராகரித்தனர்.

மேலும் செய்திகள்