தேசிய செய்திகள்
கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல் என தகவல்

கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதால் தடுப்பூசியின் தேவை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒரு டோஸை 250 ரூபாய் என்ற விலைக்கு சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் விற்பனை செய்து வந்தது. இந்த சூழலில் தடுப்பூசிக்கான தேவை அதிகரித்து வரும் சூழ்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை சீரம் இன்ஸ்டிடியூட் உயர்த்தியது. 

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் உயர்த்திய நிலையில், கோவாக்சின் தடுப்பூசியின் விலையும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதன் பரவலை தடுப்பதற்காக கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. தற்போது, இந்த தடுப்பூசிகள்தான் நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கொரோனா தடுப்பூசிகளின் விலையை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனத்தை மத்திய அரசு கேட்டு கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட இந்தியா தயாராகி வரும் நிலையில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்