தேசிய செய்திகள்
டெல்லியில் ஊரடங்கு மீண்டும் நீட்டிப்பா? கெஜ்ரிவால் இன்று அறிவிக்க வாய்ப்பு

டெல்லியில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது.
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைத்து வருகிறது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில், 2,260 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. ஏப்ரல் முதல் வாரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 36 சதவிகிதமாக இருந்தது. தற்போது  தொற்று பாதிப்பு 3.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. 

தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளதால், ஏப்ரல் 19 ஆம் தேதி முதலில் அமலில் உள்ள ஊரடங்கு  தளர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்தது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு வரும் 24 ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் நிலையில், முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஊரடங்கு குறித்த அறிவிப்பை இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொற்று பாதிப்பு குறைந்தாலும் உயிரிழப்பு விகிதம் அதிகமாக உள்ளதால் டெல்லியில் மேலும் ஒருவாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.  டெல்லியில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடும் நிலவுவதால் ஊரடங்கை நீட்டித்தே அறிவிப்பு வெளியாகும் என்று  பரவலாக பேசப்படுகிறது. 


தொடர்புடைய செய்திகள்