டெல்லியில் தற்போது 27,610 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் பலனாக உச்சத்தில் இருந்து வந்த கொரோனா தற்போது குறைந்து வருகிறது.
இந்நிலையில் டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1,649 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,16,868 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 189 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் டெல்லியில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,202 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 5,158 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதன் மூலம் அங்கு இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,66,056 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது 27,610 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.