மெட்ரோ ரெயிலில் பயணித்த பிரதமர் மோடி

அகமதாபாத்தில் மெட்ரோ ரெயிலில் பிரதமர் மோடி பயணித்தார்.

Update: 2024-09-16 15:09 GMT

காந்தி நகர்,

பிரதமர் மோடி இன்று குஜராத் சென்றுள்ளார். அவர் நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். அகமதாபாத் - புஜ் நகர்களுக்கு இடையே இந்த ரெயில் இயக்கப்படுகிறது. வந்தே மெட்ரோ ரெயில் பெயரை நமோ பாரத் ரேபிட் ரெயில் என மாற்றம் செய்து இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

இதனிடையே, அகமதாபாத் மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2ம் பாகத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், அகமதாபாத் மெட்ரோ ரெயிலில் பிரதமர் மோடி பயணித்தார். மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2ம் பாகத்தை தொடங்கி வைத்தப்பின் அதேரெயிலில் குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேலுடன் பிரதமர் மோடி பயணித்தார். இந்த பயணத்தின்போது, மெட்ரோ ரெயில் ஊழியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்