கஞ்சா கடத்தல் வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை

கஞ்சா கடத்தல் வழக்கில் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.;

Update:2022-11-30 00:15 IST

லாத்தூர், 

கர்நாடகாவின் பீதர் மாவட்டத்தில் உள்ள அவுரத் பர்சாலி தாலுகாவில் மாலேகாவ் தாண்டாவில் வசிக்கும் ராகுல் நீலகாந்த் பவார், ஷிரிஷ் ரகுநாத் ஜாதவ், சோம்நாத் சிவாஜி ஜாதவ் ஆகியோர் 176 கிலோ கஞ்சாவை கடந்திய வழக்கில் 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். லத்தூர் மாவட்டத்தில் உள்ள உத்கிர் கோர்ட்டில் இவர்கள் மீதான வழக்கு நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவில், 3 பேர் மீதான குற்றமும் நிரூபிக்கப்பட்டது. அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்