10 ஆண்டுகளில் மும்பை- கோவா நெடுஞ்சாலை விபத்தில் 1,500 பேர் பலி

10 ஆண்டுகளில் மும்பை- கோவா நெடுஞ்சாலை விபத்தில் 1,500 பேர் பலியாகி உள்ளதாக சட்டசபையில் மந்திரி தெரிவித்தார்.;

Update:2022-08-18 23:23 IST

மும்பை, 

மராட்டிய சட்டசபையில் மும்பை- கோவா நெடுஞ்சாலையில் நடைபெறும் விபத்துகள் குறித்து சிவசேனா எம்.எல்.ஏ. சுனில் பிரபு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

இதற்கு பதில் அளித்து மராட்டிய பொதுப்பணி துறை மந்திரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது:-

2012-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை மும்பை- கோவா நெடுஞ்சாலையில் மொத்தம் 6 ஆயிரத்து 692 விபத்துகள் நடந்து உள்ளன. இதில் 1,512 பேர் உயிரிழந்து உள்ளனர். 2023 ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நெடுஞ்சாலை விரிவுபடுத்தும் பணிகளை முடிக்க மாநில அரசு முயற்சித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பணி பல ஆண்டுகளாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்