தீபாவளி பண்டிகையை யொட்டி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,919 புதிய வாகனங்கள் பதிவு
தீபாவளி பண்டிகயையொட்டி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,919 புதிய வாகனங்கள் பதிவாகி உள்ளதாக மும்பை வட்டார போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது.;
மும்பை,
தீபாவளி பண்டிகயையொட்டி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1,919 புதிய வாகனங்கள் பதிவாகி உள்ளதாக மும்பை வட்டார போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது.
புதிய வாகனங்கள் பதிவு
மும்பையில் கடந்த 2 ஆண்டாக களை இழந்து காணப்பட்ட தீபாவளி பண்டிகையை நடப்பாண்டில் பொதுமக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாட்களில் புதிய வாகனங்கள் மற்றும் வீடுகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் மும்பை வட்டார போக்குவரத்து கழக அலுவலகத்தில் கடந்த ஒரு வாரத்தில் அதாவது 15-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை மொத்தம் 1,919 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதில் 1,301 இருசக்கர வாகனங்கள், 586 ஆட்டோக்கள் மற்றும் 24 டாக்சிகள் உள்பட பல வாகனங்கள் ஆகும்.
இது பற்றி மூத்த போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், மும்பையில் புதிய வாகனங்கள் வாங்குவது பொதுவாக தீபாவளி, தசரா, குடிபட்வா மற்றும் அட்சய திரிதியை நாட்களில் அதிகமாக இருக்கும்.
வாகன பதிவு தீவிரம்
இந்த நாட்களில் புதிதாக தொழில் தொடங்குவதற்கும், புதிய அடுக்குமாடி வீடுகள், கார்கள் வாங்க அதிர்ஷ்டமான காலமாக பொதுமக்களின் நம்பிக்கை. மும்பை சென்ட்ரல் மட்டுமின்றி மாநிலத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து கழகத்தில் தீபாவளி கொண்டாட்டத்தை கருத்தில் கொண்டு வாகன பதிவை விரைவு படுத்தி உள்ளேம்.
இதனால் சரியான நேரத்தில் டெலிவரிகளை வழங்கி வருகிறோம். விரைவான பதிவுகளுக்கு உத்தரவாதம் அளிக்க விடுமுறை காலத்திலும் வேலை பார்த்து வருவதாக அவர் தெரிவித்தார்.