ரூ.1.90 லட்சம் லஞ்சம் வாங்கிய 2 மாநகராட்சி என்ஜினீயர்கள் கைது
ரூ.1.90 லட்சம் லஞ்சம் வாங்கிய 2 மாநகராட்சி என்ஜினீயர்கள் கைது செய்யப்பட்டனர்.;
மும்பை,
ரூ.1.90 லட்சம் லஞ்சம் வாங்கிய 2 மாநகராட்சி என்ஜினீயர்கள் கைது செய்யப்பட்டனர்.
லஞ்சம்
மும்பையை சேர்ந்த ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் விற்று வரும் கடை உரிமையாளர் ஒருவர் தனது கடை முன்பகுதியில் மழைக்காலத்தை யொட்டி ஷெட் அமைக்க டி வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் அனுமதி கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அங்கு என்ஜினீயராக இருந்த சந்திரகாந்த் தவில்(வயது39), தத்தாத்ரே சம்பாஜி (36) ஆகிய 2 பேர் அவரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் தந்தால் அனுமதி தருவதாக தெரிவித்தனர்.
இதனால் கடை உரிமையாளர் நடத்திய பேரத்தில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் தருவதாக ஒப்புக்கொண்டார்.
கைது
பினனர் லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், இது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் யோசனைப்படி கடை உரிமையாளர் அவர்களை சந்தித்து ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் கொடுத்து உள்ளார்.
இதனை பெற்ற 2 என்ஜினீயர்களை அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
---------------