மும்பை- புனே விரைவு சாலையில் லாரி மீது கார் மோதி 2 பேர் பலி

மும்பை- புனே விரைவு சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.;

Update:2022-08-18 21:44 IST

மும்பை, 

மும்பை கோரேகாவ் பகுதியில் வசித்து வருபவர் ஜெயந்த் தாங்கே (வயது46). பங்கு சந்தை தரகர். இவர் சம்பவத்தன்று நண்பர்கள் சைலேந்திர சுக்லா (34), சசிகுமார் பிரசாத் (45) ஆகியோருடன் கோவாவில் இருந்து காரில் மும்பைக்கு வந்தார். கார் நள்ளிரவு 1 மணியளவில் மும்பை- புனே விரைவு சாலையில் பன்வெல் அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது காரை ஓட்டி வந்த ஜெயந்த் தாங்கே தூங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து அந்த வழியாக சென்ற லாரியில் மோதியது. மேலும் தடுப்பு சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் காரில் இருந்த 3 பேரும் படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து சென்ற போலீசார் 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சைலேந்திர சுக்லா, சசிகுமார் பிரசாத் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து ஜெயந்த் தாங்கே மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்