பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 2 பேர் கைது

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக 2 பேர் பாந்திராவில் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-09-04 22:36 IST

மும்பை, 

பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக 2 பேர் பாந்திராவில் கைது செய்யப்பட்டனர்.

2 பேர் கைது

மும்பை பாந்திரா, நிர்மல்நகர் பகுதியில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படும் 2 பேர் தங்கி இருப்பதாக மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கு மேற்கு வங்க போலீசார் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் பாந்திராவில் தங்கி இருந்த மேற்கு வங்க மாநிலம், டைமன்ட் ஹார்பர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த சதாம் ஹூசேன் கான், சமீர் ஹூசேன் சேக்(வயது30) ஆகிய 2 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அல்கொய்தாவுடன் தொடர்பு

இது குறித்து மேற்கு வங்க போலீசார் கூறுகையில், "கைது செய்யப்பட்ட 2 பேருக்கும் அல்கொய்தா கிளை அமைப்புடன் தொடர்பு உள்ளது. 2 பேரும் மேற்குவங்க போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சமீர் ஹூசேன்சேக் அப்தால்புர் பகுதியில் உள்ள மசூதியில் இமாமாக இருந்து உள்ளார். அப்போது இமாம் போர்வையில் அவர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு இருக்கிறார்.

இதேபோல சதாம் ஹூசேன் கான் அல்கொய்தா அமைப்புக்காக சமூகவலைதளத்தில் ஜிகாதி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக எங்களுக்கு புகார் வந்தது. கைது செய்யப்பட்ட போது 2 பேரின் செல்போனிலும் மர்ம செயலி இருந்தது. 2 பேருடன் வேறுயாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்" என்றாா்.

மேலும் செய்திகள்