மாவட்ட செய்திகள்
குர்லாவில்சிறுமியை கற்பழித்த டியூசன் ஆசிரியர் கைது

குர்லாவில் சிறுமியை கற்பழித்த டியூசன் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை, 

குர்லாவில் சிறுமியை கற்பழித்த டியூசன் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமி கற்பழிப்பு

மும்பை குர்லாவை சேர்ந்தவர் லூயிஸ் பெர்னாண்டஸ் (வயது55). டியூசன் ஆசிரியர். இவரது டியூசன் வகுப்பில் அந்த பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி படித்து வந்தாள். இந்தநிலையில், சிறப்பு வகுப்பு என்று கூறி சம்பவத்தன்று சிறுமியை மட்டும் அவர் தனது வீட்டுக்கு அழைத்து உள்ளார்.

இதையடுத்து, தனது வீட்டுக்கு வந்த சிறுமியை அவர் கற்பழித்ததாக கூறப்படுகிறது. மேலும் சம்பவத்தை வெளியில் கூறக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.

டியூசன் ஆசிரியர் கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி வீட்டிற்கு வந்ததும் நடந்த சம்பவத்தை தனது தாயிடம் கூறி அழுதார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மகளை வினோபாவே நகர் போலீஸ் நிலையம் அழைத்து சென்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் டியூசன் ஆசிரியர் லூயிஸ் பெர்னாண்டஸ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக காட்கோபர் ராஜவாடி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாள்.