தானே,
தானே மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பார்வி அணைக்கட்டு பகுதியில் புதிதாக பைப்லைன் அமைக்கும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணி முதல் நாளை மதியம் 12 மணி வரை அதாவது 24 மணி நேரம் நடைபெற உள்ளது. இதன் காரணமாக தானே மாநகராட்சிக்கு உட்பட்ட திவா, மும்ரா மற்றும் கல்வா, ரூபாதேவி பாடா, கிசான்நகர், வாக்ளே வார்டு, நேருநகர், மான்பாடா, கோல்சேட், கல்சா கிராமம் பகுதியில் 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் ரத்து செய்யப்படுகிறது. பணிகள் நிறைவு பெற்றவுடன் அடுத்த 2 நாட்களுக்கு தண்ணீர் வினியோகம் குறைந்த அழுத்தத்துடன் செய்யப்படும். பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி ஒத்துழைப்பு தரும்படி மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.