உதவி செய்வதாக கூறி வங்கி வாடிக்கையாளரிடம் பண மோசடி செய்த 3 பேர் கைது
பால்கர் மாவட்டத்தில் உள்ள வங்கி வாடிக்கையாளர்களிடம் உதவி செய்வதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது;
வசாய்,
பால்கர் மாவட்டத்தில் உள்ள வங்கி வாடிக்கையாளர்களிடம் பணத்தை டெபாசிட் செய்ய உதவி செய்வதாக கூறி மோசடி நடந்து வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதில் 3 பேரின் அடையாளம் தெரியவந்தது. இதையடுத்து மிராரோட்டை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.21 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 3 பேரின் மீது ஏற்கனவே விரார், வெர்சோவா மற்றும் போரிவிலி போலீஸ் நிலையங்களில் 5 வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.