வைர வியாபாரியிடம் ரூ.80 லட்சம் பறிக்க முயன்ற 3 பேர் கைது

வைர வியாபாரியிடம் நாடகமாடி ரூ.80 லட்சம் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2022-09-22 11:00 IST

மும்பை, 

வைர வியாபாரியிடம் நாடகமாடி ரூ.80 லட்சம் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.80 லட்சம்

மும்பையை சேர்ந்த வைரவியாபாரி ஜெயராம். இவர் குஜராத்தை சேர்ந்த ரவி கோகோரி (வயது33) என்பவரிடம் ரூ.3 கோடி மதிப்புள்ள வைரகற்களை கொடுத்து துபாயில் உள்ள அவரது அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவித்து இருந்தார். இதன்படி ரவி கோகோரி வைரகற்களை பெற்று கொண்டு சென்றார். பின்னர் ஜெயராமிடம் இருந்து பணம் பறிக்க அவர் திட்டம் போட்டார்.

இதன்படி ஜெயராமை தொடர்பு கொண்டு மும்பை விமான நிலையத்தில் தான் சுங்கவரித்துறை அதிகாரியால் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், வைரகற்களுடன் தன்னை விடுவிக்க ரூ.80 லட்சம் அனுப்பும்படியும் தெரிவித்தனர்.

3 பேர் கைது

இதனால் வைரவியாபாரி ஜெயராம், சாகர் போலீஸ் நிலையத்தில் விசாரித்தார். ஆனால் அவர் கூறிய படி எதுவும் நடக்கவில்லை என தெரியவந்தது. இதனால் தன்னை ஏமாற்றி நாடகமாடிய ரவி கோகோரி மீது போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் படி போலீசார் நடத்திய விசாரணையில் ரவிகோகோரி காஷிமீரா பகுதியில் உள்ள லாட்ஜில் கூட்டாளிகளுடன் தங்கி இருந்தது தெரியவந்தது. இதன்படி போலீசார் அங்கு சென்று அவர் உள்பட விஜ்யா ஹிராப்ரா (25), கிசான் ஹரோயா (20) ஆகிய 3 பேரை பிடித்து கைது செய்தனர். வைர வியாபாரியிடம் பணம் பறிக்க முயன்ற அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்