தானேயில் ரூ.4½ கோடி போதைப்பொருளுடன் 3 பேர் கைது

தானேயில் ரூ.4½ கோடி எம்.டி. போதைப்பொருளுடன் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2023-05-02 00:15 IST

மும்பை, 

தானேயில் ரூ.4½ கோடி எம்.டி. போதைப்பொருளுடன் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.4½ கோடி எம்.டி.

தானேயில் ஒரு கும்பல் வெளி மாநிலங்களில் இருந்து போதைப்பொருட்களை வாங்கி மும்பையில் சப்ளை செய்து வருவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவல் குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பிவண்டி பகுதிக்கு 2 பேர் அதிகளவு போதைப்பொருளுடன் வர இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த பி.எஸ். வீர், ரோகன் ஆகிய 2 பேரை பிடித்தனர். அவர்களிடம் இருந்து அதிகாரிகள் 2 கிலோ எம்.டி. போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.4½ கோடி என கூறப்படுகிறது.

3 பேர் கைது

2 பேரிடமும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பிவண்டியை சேர்ந்த ஐ.ஜி.என். அன்சாரி அவர்களுக்கு போதைப்பொருளை சப்ளை செய்தது தெரியவந்தது. போலீசார் அன்சாரியை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். மேலும் ரூ.36 லட்சம் பணம், ரூ.7¾ லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அன்சாரி 5 முதல் 6 ஆண்டுகளாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் பி.எஸ். வீர், ரோகன் மற்றும் அன்சாரியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்