கார் மீது லாரி மோதிய விபத்தில் குழந்தைகள் உள்பட 3 பேர் பலி

மும்பை-கோவா நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உள்பட 3 பேர் பலியாகினர்.;

Update:2023-04-09 00:30 IST

மும்பை,

மும்பை-கோவா நெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உள்பட 3 பேர் பலியாகினர்.

கட்டுப்பாட்டை இழந்த கார்

மும்பை போரிவிலியை சேர்ந்தவர் தர்ஷன் தாவ்டே (வயது36). இவர் தனது மனைவி சுவேதா (34) மகன் ரிவான் (3) மகள் ரித்தியா மற்றும் தாய் வைஷ்ணவி (72) ஆகியோருடன் சொந்த ஊரான சிந்தூர்க் மாவட்டம் தேவ்கட் பகுதிக்கு காரில் புறப்பட்டு சென்றனர்.

கார் காலை 6.30 மணி அளவில் மும்பை-கோவா நெடுஞ்சாலை மான்காவ் தாலுகா இந்தபூர் கிராமம் ஆதர்ஷ்நகர் காலனியை நெருங்கியது. அப்போது திடீரென கார் தர்ஷன் தாவ்டேவின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி வலதுபுறமாக திரும்பி நின்றது.

3 பேர் பலி

அப்போது மும்பை நோக்கி வந்த லாரி, அந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரின் முன் இருக்கையில் இருந்த சிறுவன் ரிவான், மூதாட்டி வைஷ்ணவி, பின்இருக்கையில் இருந்த சிறுமி ரித்தியா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் இருந்த தர்ஷன் தாவ்டே மற்றும் அவரது மனைவி சுவேதா படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று 2 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான 3 பேரின் உடல்களை மீ்ட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்