வங்கதேசத்தில் இருந்து புனேக்கு ரூ.2 லட்சம் கள்ளநோட்டுகள் கடத்தி வந்த 3 பேர் கைது
வங்க தேசத்தில் இருந்து புனேவிற்கு ரூ.2 லட்சம் கள்ள நோட்டுகளை கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.;
புனே,
வங்க தேசத்தில் இருந்து புனேவிற்கு ரூ.2 லட்சம் கள்ள நோட்டுகளை கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ள நோட்டுகள்
வெளிநாட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட கள்ளநோட்டுகள் புனேயில் புழக்கத்தில் விட கும்பல் வரவுள்ளதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் படி சுங்கவரித்துறை அதிகாரிகளின் இணைந்து காட்கி பஜார் லைன் பகுதியில் ரகசியமாக கண்காணித்தனர்.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை சந்தேகத்தின் பேரில் வழிமறித்து விசாரித்தனர். இதில் முன்னுக்கு பின் முரணமாக பதிலளித்ததால் அவர் வைத்திருந்த உடைமையை பிரித்து சோதனை போட்டனர்.
கள்ள நோட்டுகள்
இதில் கத்தை கத்தையாக பணநோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதனை சோதனை போட்டதில் அனைத்தும் கள்ளநோட்டுகள் என தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
இது தொடர்பாக நடத்திய விசாரணையில் வங்கதேசத்தில் இருந்து கடத்தப்பட்டதாகவும் இவருடன் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. போலீசார் அவர்களையும் பிடித்து கைது செய்தனர். பிடிபட்ட 3 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.