வசாய்,
பால்கர் மாவட்டம் மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலை சுத்ராகர் பாட்டா பகுதியில் நேற்று காலை 11.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் 3 பேர் அமர்ந்து சென்றனர். அதிவேகமாக சென்ற மோட்டார் சைக்கிள் சாலை ஓரமாக நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 3 பேரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று 3 பேரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேரும் பலியாகினர். குஜராத் மாநிலம் சஞ்சனில் இருந்து நாசிக் மாவட்டம் ஹர்சுல் நோக்கி சென்றபோது அவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.