ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை அடிக்க முயன்ற 3 பேர் கைது- வாகன சோதனையில் சிக்கினர்

ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை அடிக்க முயன்ற 3 பேரை போலீசார் வாகன சோதனையின்போது மடக்கி பிடித்தனர்.;

Update:2022-07-20 21:15 IST

தானே, 

ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை அடிக்க முயன்ற 3 பேரை போலீசார் வாகன சோதனையின்போது மடக்கி பிடித்தனர்.

ரகசிய தகவல்

தானே மாவட்டம் முர்பாட் பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை கும்பல் வரவுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த கார் ஒன்றை சந்தேகத்தின் பேரில் போலீசார் வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது அந்த காரில் போலீசார் நடத்திய சோதனையில் கேஸ் கட்டர் உள்பட பல பொருட்கள் இருந்ததை கண்டனர்.

3 பேர் கைது

இது தொடர்பாக காரில் இருந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை அடிக்கும் திட்டத்துடன் அவர்கள் வந்தது தெரியவந்தது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இதில் ஒருவர் அகமது நகரை சேர்ந்தவர் என்பதும், மற்ற 2 பேரும் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் எனபதும் தெரியவந்தது. இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 4 நாட்கள் போலீஸ்காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்