காசாளரை தாக்கி ரூ.11¾ லட்சம் பறித்து சென்ற 3 பேர் கைது
காசாளரை தாக்கி ரூ.11.75 லட்சம் பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 2 பேர் லக்னோவில் சிக்கினர்.;
தானே,
காசாளரை தாக்கி ரூ.11.75 லட்சம் பறித்து சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 2 பேர் லக்னோவில் சிக்கினர்.
பணம் பறிப்பு
கல்யாணில் தனியார் வங்கி ஒன்றில் கடந்த மாதம் 29-ந்தேதி தனியார் நிறுவன காசாளர் ஒருவர் பணம் டெபாசிட் செய்ய சென்றார். அப்போது அங்கு வந்த கும்பல் அவரது மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தினர். பின்னர் காசாளர் கையில் இருந்த பணப்பையை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்த பணப்பையில் ரூ.11 லட்சத்து 75 ஆயிரம் இருந்தது. இது பற்றி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர்.
3 பேர் கைது
இதில் பணத்தை பறித்து சென்ற கும்பலை சேர்ந்த 3 பேரின் அடையாளம் தெரியவந்தது. இதில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பதுங்கி இருந்த 2 பேரை பிடித்து கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் படி மற்றொரு வாலிபர் பிவண்டியில் கைது செய்தனர். பிடிபட்ட 3 பேரும் 20 வயதுடைய வாலிபர்கள் என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கொள்ளை கும்பலிடம் இருந்து ரூ.8 லட்சம், செல்போன், மோட்டார் சைக்கிள் இருந்ததை பறிமுதல் செய்தனர்.