மும்பை,
தாராவி போலீஸ் நிலையம் அருகே வசித்து வந்தவர் முகமது ஜாஹித் (வயது26). பூங்கா காவலாளி. இவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தாராவி 90 அடி சாலையில் மனைவியின் கண் எதிரே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தாராவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது முன்விரோதம் காரணமாக காவலாளி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போலீசார் காவலாளியை கொலை செய்ததாக உசேன் அலிஹாசன் (24), அவரது நண்பன் சாஜித் அலி சேக் (20), அயன் சாகித் கான் (18) ஆகிய 3 பேரை கைது செய்து உள்ளனர். 3 பேரும் தாராவியை சோ்ந்தவர் ஆவர். இதில் உசேன் அலிஹாசன், சாஜித் அலி சேக் காவலாளியை கொலை செய்தவர்கள் எனவும், அயன் சாகித் கான் காவலாளியின் நடமாட்டத்தை கண்காணித்து கொலையாளிகளுக்கு தகவல் கொடுத்து வந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.