காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மராட்டிய பளுதூக்கும் வீரருக்கு ரூ.30 லட்சம்
காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மராட்டிய பளுதூக்கும் வீரருக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதல்-மந்திரி ஷிண்டே அறிவித்தார்.;
மும்பை,
காமன்வெல்த் போட்டிகள் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது. இதில் 55 கிலோ பளுதூக்கும் பிரிவில் சங்கித் சர்கார் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். 21 வயதான சங்கித் சர்கார் சாங்கிலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். அவருக்கு ரூ.30 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்ட தகவலில்:- காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரர் சங்கித் சர்காருக்கு ரூ.30 லட்சமும், அவரது பயிற்சியாளருக்கு ரூ.7 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.