மும்பை,
மும்பை கிராண்ட் ரோடு பகுதியை சேர்ந்த 60 வயது முதியவருக்கு டேட்டிங் செயலி மூலம் பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. இதில், அப்பெண் முதியவரிடம் ஆபாசமாக பேசி வீடியோ அழைப்பில் வரும்படி தெரிவித்தார். இதன்படி செயல்பட்ட முதியவருக்கு சில நாட்கள் கழித்து வீடியோ ஒன்று வந்தது. இதில் முதியவரின் ஆபாச காட்சிகள் இருந்ததை கண்டு திடுக்கிட்டார். வீடியோ அனுப்பிய நபரை தொடர்பு கொண்டு வீடியோவை அழித்து விடுமாறு தெரிவித்தார். இதற்கு எதிர்முனையில் பேசிய நபர் பணம் தந்தால் வீடியோவை அழித்து விடுவதாக மிரட்டினார்.
இதனையடுத்து முதியவர் அந்த நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ரூ.4 லட்சத்தை அனுப்பி உள்ளார். மேலும், மேலும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் விரக்தியடைந்த முதியவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி கும்பலை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.