ஆட்டோக்கள் திருடிய 4 பேர் கைது

Update:2023-01-13 00:15 IST

மும்பை,

நவிமும்பையில் ஆட்டோ திருட்டு சம்பவங்கள் தொடர்பாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ திருட்டில் ஈடுபடும் நபர்களை தேடிவந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் போலீசார் ஆட்டோ டிரைவர் ரெகுமான் யூசுப் கானை (வயது23) கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஆட்டோ திருட்டில் ஈடுபட்டு வந்த ஆட்டோ டிரைவர் முகமது நதீம் சேக் (38), பிளம்பர் சாகிப் சகில் (29), திருட்டு ஆட்டோக்களை வாங்கி விற்று வந்த மான்கூர்டை சேர்ந்த ஹசன் இமாம்சாகிப் செய்யது (35) ஆகியோரை கைது செய்தனர். போலீசார் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.7.60 லட்சம் மதிப்பிலான 10 ஆட்டோக்களை பறிமுதல் செய்தனர். வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்