நகர்புற உள்ளாட்சிகளில் 40 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்- முதல்-மந்திரி ஷிண்டே தகவல்

Update:2023-01-12 00:15 IST

மும்பை,

மும்பை உள்பட மாநிலத்தில் உள்ள முக்கிய மாநகராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகளின் மாநாட்டில் பேசிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது:-

நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. இதில் 40 ஆயிரம் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை விரைவில் தொடங்கும். மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தங்கள் அதிகார வரம்புகளுக்கு உள்பட்ட பகுதிகளில் சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

கட்டுமான பணிகளுக்கான அனுமதிகளை ஆன்லைனில் பெறுவதை உறுதி செய்ய வேண்டும். அதுமட்டும் இன்றி மாநகராட்சியின் வருவாயை அதிகரிப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். மேலும் மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை விற்பனை செய்ய வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்