விநாயகர் சதுர்த்தியின் 6-வது நாளில் 48 ஆயிரம் சிலைகள் கரைப்பு
மும்பையில் விநாயகர் சதுர்த்தியின் 6-வது நாளில் கவுரி உள்பட 48 ஆயிரம் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.;
மும்பை,
மும்பையில் விநாயகர் சதுர்த்தியின் 6-வது நாளில் கவுரி உள்பட 48 ஆயிரம் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.
சிலைகள் கரைப்பு
மும்பையில் கடந்த 2 ஆண்டாக களை இழந்து காணப்பட்ட விநாயகர் சதுர்த்தி நடப்பு ஆண்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் 1½, 3 நாட்கள், 5 நாட்கள் மற்றும் 7 நாட்கள் என பக்தர்கள் வீடு மற்றும் கணபதி மண்டல்களில் வைத்து வழிபாடு செய்து சிலைகளை கரைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று மாலை முதல் இன்று வரையில் பொதுமக்கள் 6-வது நாளாக விநாயகர் சிலைகளை ஆர்வமாக நீர்நிலைகளில் கரைத்தனர்.
48 ஆயிரம் சிலைகள்
இதன் காரணமாக கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நகரில் 6-வது நாளான இன்று காலை 6 மணி வரையில் வீடுகளில் வைக்கப்பட்டு இருந்த 41 ஆயிரத்து 340 சிலைகள், 429 கணபதி மண்டல் சிலைகள் மற்றும் 6 ஆயிரத்து 260 கவுரி சிலைகள் என சேர்த்து 48 ஆயிரத்து 29 சிலைகள் கரைக்கப்பட்டது. அதிகபட்சமாக 15 ஆயிரத்து 265 சிலைகள் செயற்கை குளங்களில் கரைக்கப்பட்டது.
5-வது நாளான கடந்த 4-ந் தேதி மும்பையில் உள்ள கடல் மற்றும் செயற்கை குளத்தில் 31 ஆயிரத்து 365 சிலைகள் கடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
------------------