மும்பை, மார்ச்.27-
குஜராத்தை சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 2017-ம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் மூக்கு உடைந்தது. இதனால் அவர் மும்பையில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றார். அப்போது அங்கிருந்த 63 வயது டாக்டர் அப்பெண்ணிடம் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளீர்கள். ஆகவே நீங்கள் சிகிச்சை பெறவேண்டாம் என கொஞ்சி பேசி உள்ளார்.
இதனைக்கேட்ட அப்பெண் அதிா்ச்சி அடைந்தார். மேலும் அந்த டாக்டர் அடிக்கடி செல்போனில் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் வெறுப்படைந்த அப்பெண் டாக்டர் மீது போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் படி போலீசார் டாக்டர் மீது வழக்கு பதிவு செய்து, செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டில் நடந்த விசாரணையில் டாக்டர் மீதான குற்றம் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபணமானது. இதனை தொடர்ந்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி, டாக்டருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.