76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டன - ரிசர்வ் வங்கி தகவல்

புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளில் 76 சதவீத நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.;

Update:2023-07-04 00:15 IST

மும்பை, 

புழக்கத்தில் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் 19-ந்தேதி அறிவித்தது. இந்த நோட்டுகளை செப்டம்பர் 30-ந்தேதி வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து மக்கள் பல்வேறு வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர். மேலும் தங்கள் கணக்குகளிலும் செலுத்தி வருகின்றனர். இதன்மூலம் 76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இது தொடர்பாக வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'வங்கிகளில் இருந்து கிடைத்த புள்ளி விவரங்கள்படி, கடந்த 30-ந்தேதி வரை ரூ.2.72 லட்சம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி உள்ளன. இதன் மூலம் 76 சதவீத நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டு உள்ளன' என கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து ரூ.84 ஆயிரம் கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே தற்போது புழக்கத்தில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கியின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்