ஓய்வு பெற்ற என்ஜினீயரிடம் ரூ.8 லட்சம் அபேஸ்

நூதன முறையில் ஓய்வு பெற்ற என்ஜினீயரிடம் ரூ.8 லட்சம் அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update:2022-06-04 17:58 IST

மும்பை,

நூதன முறையில் ஓய்வு பெற்ற என்ஜினீயரிடம் ரூ.8 லட்சம் அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கூடுதலாக பணம் செலுத்தினார்

மும்பை மாகிம் பகுதியில் 77 வயது ஓய்வு பெற்ற என்ஜினீயர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று முல்லுண்டு பகுதியில் இருந்து மாகிமிற்கு தனியார் நிறுவன வாடகை காரில் வந்தார். இதில் அவர் 'கூகுள் பே' மூலம் வாடகையை செலுத்தினார். அப்போது அவர் கூடுதலாக ரூ.1,100 செலுத்திவிட்டார்.

எனவே அவர் கூடுதலாக செலுத்திய பணத்தை திரும்ப பெற, வாடகை கார் நிறுவன வாடிக்கையாளர் உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது அவரது இணைப்பு துண்டிக்கப்பட்டது.

ரூ.8 லட்சம் மோசடி

இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து மற்றொரு எண்ணில் இருந்து ஒருவர் பேசினார். அவர் என்ஜினீயருக்கு அவரது பணம் திரும்ப கிடைக்க உதவி செய்வதாக கூறினார். மேலும் அவர் என்ஜினீயரை அவரது செல்போனில் ஒரு செயலியை டவுன்லோடு செய்ய சொன்னார். என்ஜினீயரும் தனது பணம் திரும்ப கிடைக்கும என நினைத்து அந்த செயலியை டவுன்லோடு செய்தார்.

இந்தநிலையில் போனில் பேசிய நபர் அந்த செயலியை பயன்படுத்தி, என்ஜினீயரின் வங்கி கணக்கில் இருந்த ரூ.8 லட்சத்தை அபேஸ் செய்தார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த என்ஜினீயர் சம்பவம் குறித்து மாகிம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓய்வு பெற்ற என்ஜினீயரிடம் நூதன முறையில் ரூ.8 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்