மும்பை- தூத்துக்குடி இடையே 8 சிறப்பு ரெயில்கள் - முன்பதிவு இன்று தொடக்கம்
மும்பை - தூத்துக்குடி இடையே 8 சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.;
மும்பை,
மும்பை - தூத்துக்குடி இடையே 8 சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில்
மும்பை- தூத்துக்குடி இடையே 8 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என மத்திய ரெயில்வே அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக நேற்று மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:- வருகிற 7-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சி.எஸ்.எம்.டி.யில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (01143) மறுநாள் இரவு 11 மணிக்கு தூத்துக்குடி சென்றடையும். இதேபோல வருகிற 9-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் பிற்பகல் 3.40 மணிக்கு சி.எஸ்.எம்.டி வந்தடையும்.
முன்பதிவு இன்று தொடக்கம்
இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (5-ந் தேதி) தொடங்குகிறது. ரெயில் தாதர், கல்யாண், லோனாவாலா, புனே, தவுன்ட், ரேணிகுண்டா, திருத்தனி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் போர்ட், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.