மும்பை,
மும்பை உள்ள கார் பகுதியில் வாட்டர்பில்ட் சாலையில் செயல்பட்டு வரும் ஸ்பா ஒன்றில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த ஸ்பாவில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு விபசாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கு விபசாரத்திற்காக தங்க வைக்கப்பட்டு இருந்த 9 பெண்களை மீட்டனர். மீட்கப்பட்ட 9 பேரில் 5 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார். மேலும் 2 பெண்கள் மிசோரத்தையும், ஒருவர் நாகாலாந்தையும், மற்றொருவர் டார்ஜிலிங்கையும் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்களை போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் அங்கு பெண்களை வைத்து விபசாரம் நடத்தி வந்த ஒரு பெண் உள்பட 2 பேரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருங்கின்றனர். சம்பவ இடத்தில் இருந்து போலீசார் ரூ.15 ஆயிரம் ரொக்கம், மொபைல் போன் மற்றும் பல்வேறு பொருட்களை கைப்பற்றினர். சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.