17 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம்- 2 பேருக்கு வலைவீச்சு
போலீசார் என கூறி 17 வயது சிறுமியை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
தானே,
போலீசார் என கூறி 17 வயது சிறுமியை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பலாத்காரம்
தானே மவட்டம் டோம்பிவிலி டவுண் பகுதியில் உள்ள கழிமுக கால்வாய் பகுதியில் நேற்று முன்தினம் 17 வயது சிறுமி தனது காதலனுடன் சேர்ந்து பேசி கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த 2 பேர் தாங்கள் போலீஸ்காரர்கள் எனவும், ஆபாச செயல்களை தடுத்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
பின்னர் சிறுமி, காதலுடன் ஆபாச செய்கையில் ஈடுபட்டது குறித்து விசாரிக்க போலீஸ் நிலையத்திற்கு தங்களுடன் வருமாறு அழைத்தனர். அவர்களின் மிரட்டலுக்கு பயந்த சிறுமி அவர்களுடன் சென்றார். அப்போது அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு 2 பேரும் சேர்ந்து சிறுமியை கடத்தி சென்றனர். மேலும் அங்குவைத்து 2 பேரும் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்தனர்.
2 பேருக்கு வலைவீச்சு
மேலும் இந்த சம்பவத்தை செல்போனில் பதிவு செய்து வைத்தனர். இதுகுறித்து யாரிடம் தெரிவித்தால் ஆபாச வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டினர்.
பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் தெரிவித்தாள். இதன்படி பெற்றோர் சம்பவம் குறித்து விஷ்ணு நகர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்தனர். சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.