தானே,
பால்கர் மாவட்டம் நாலாச்சோப்ரா பகுதியை சேர்ந்த சிறுமி அலினா மன்சூரி (வயது4). பிவண்டியில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக பெற்றோருடன் வந்திருந்தாள். மற்ற சிறுமிகளுடன் அங்குள்ள மைதானத்தில் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அங்கு கார் ஒன்று பின்னோக்கி வந்தது. அந்த கார் விளையாடி கொண்டிருந்த சிறுமி அலினா மன்சூரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிறுமி படுகாயமடைந்தாள். சிறிது நேரத்தில் சிறுமி உயிரிழந்தாள்.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.