பள்ளத்தில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் சாவு
தானேயில் பள்ளத்தில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.;
தானே,
தானே பால்கும் யஷாவி நகர் பகுதியில் மகாடாவிற்கு சொந்தமான புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அங்கு ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் 2-வது மாடியில் குடும்பத்துடன் தங்கி பிளம்பராக வேலை பார்த்து வருகிறார். இவரது 6 வயது மகன் கடந்த 1-ந் தேதி இயற்கை உபாதை கழித்து வருவதாக கூறிவிட்டு கீழே சென்றான்.
இதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் கட்டிடத்தின் கீழே சென்று பார்த்தனர். அப்போது கழிவறைக்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் சிறுவன் விழுந்து கிடந்ததை கண்டனர். உடனே சிறுவனை மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் நடத்திய பரிசோதனையில் சிறுவன் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து காப்பூர்பாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.