பவாயில் சாலையோரம் நடந்து சென்ற சிறுவன் பஸ் மோதி பலி

பவாயில் சாலையோரம் நடந்து சென்ற சிறுவன் பஸ் மோதி பலியானான்.;

Update:2022-09-04 17:41 IST

மும்பை, 

மும்பை பவாய் ஹிராநந்தானி கார்டன் அருகே உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் பூங்கா அருகே சம்பவத்தன்று இரவு 7 மணி அளவில் 4 வயது சிறுவன் ஒருவன் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது, அந்த வழியாக வந்த பஸ் ஒன்று நடந்து சென்ற சிறுவன் மீது மோதியது. இந்த விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்தான். இதனைகண்ட அக்கம் பக்கத்தினர் விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரை மடக்கி பிடித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கல்யாணை சேர்ந்த பஸ் டிரைவர் சந்தீப் ஷிண்டே (வயது33) என்பவரை கைது செய்தனர். பலியான சிறுவன் எந்த பகுதியை சேர்ந்தவன் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

மேலும் செய்திகள்