அரசு ஆஸ்பத்திரி அருகே கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

Update:2023-04-17 01:00 IST

கோண்டியா, 

கோண்டியா மாவட்டத்தில் உள்ள கே.டி.ஏஸ். மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த உறவினரை பார்க்க ஒருவர் காரில் வந்தார். அவர் காரை நிறுத்திவிட்டு ஆஸ்பத்திரிக்குள் சென்ற நிலையில், அந்த காரில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி காரில் பிடித்த தீயை அணைத்தனர். இருப்பினும் காரின் முன் பகுதி தீயில் எரிந்து நாசமானது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்