மும்பை,
மும்பை அந்தேரி பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மனிஷ் காந்தி(வயது34). இவர் மீது அந்த நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியரான போலந்து நாட்டை சேர்ந்த 34 வயது பெண் அம்போலி போலீசில் புகார் ஒன்றை அளித்து உள்ளார். அதில், கடந்த 2017-ம் ஆண்டு வெளிநாட்டு பெண், மனிஷ் காந்தியுடன் தொழில் சம்மந்தமாக ஜெர்மனி சென்று உள்ளார். அங்கு ஓட்டல் அறையில் மனிஷ் காந்தி வெளிநாட்டு பெண்ணை கற்பழித்து இருக்கிறார். அதன்பிறகு அவர் பல்வேறு இடங்களில் வெளிநாட்டு பெண்ணை மிரட்டி கற்பழித்தார். அவர் வெளிநாட்டு பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து அதை பரப்பிவிடுவேன் எனவும் மிரட்டியதாக புகாரில் கூறப்பட்டு உள்ளது. இந்த புகார் தொடர்பாக அம்போலி போலீசார் மனிஷ் காந்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.