திருமணம் செய்வதாக கூறி நடிகையை ஏமாற்றி பலாத்காரம் செய்த தொழிலதிபர் மீது வழக்கு

மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த நடிகையை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பலாத்காரம் செய்த தொழிலதிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்;

Update:2023-08-07 01:15 IST

மும்பை, 

மும்பை அந்தேரியை சேர்ந்த நடிகை ஒருவருக்கு கடந்த 2022-ம் ஆண்டு தான்சானியா நாட்டை சேர்ந்த இந்திய தொழிலதிபர் விரேன் பட்டேல்(வயது41) என்பவர் நண்பரின் பார்ட்டியில் அறிமுகம் ஆனார். இதனை தொடர்ந்து நடிகையிடம் பேசி செல்போன் நம்பர் மூலமாக சாட்டிங் செய்து வந்தார். மேலும் திருமணம் செய்ய இருப்பதாக தெரிவித்தார். இதனை நம்பிய நடிகை தனது குடும்பத்தினர், நண்பர்களிடம் விரேன் பட்டேலை திருமணம் செய்ய இருப்பதாக தெரிவித்தார். இந்தநிலையில் கடந்த பிப்ரவரி மாதம் விரேன் பட்டேல் நடிகையை தனது வீட்டிற்கு அழைத்து உள்ளார். அங்கு வந்த நடிகையை அவர் பலாத்காரம் செய்தர். பின்னர் அவரை சமாதானப்படுத்த நடிகையின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு வருகிற டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார். இதன் பின்னர் நடிகையை பல இடங்களுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். இந்தநிலையில் திடீரென நடிகையை திருமணம் செய்ய அவர் மறுத்துள்ளார். மேலும் அவரை தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஏமாற்றம் அடைந்த நடிகை சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் விரேன் பட்டேல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்