மும்பை-கோவா நெடுஞ்சாலையில் காரில் பிணமாக கிடந்த வியாபாரி- கொலையா? போலீஸ் விசாரணை

மும்பை-கோவா நெடுஞ்சாலையில் காரில் பிணமாக கிடந்த வியாபாரியை போலீசார் மீட்டனர். இவர் கொலை செய்யப்பட்டரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-11-20 00:15 IST

மும்பை

மும்பை-கோவா நெடுஞ்சாலையில் காரில் பிணமாக கிடந்த வியாபாரியை போலீசார் மீட்டனர். இவர் கொலை செய்யப்பட்டரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரில் கிடந்த உடல் மீட்பு

ராய்காட் மாவட்டம் பன்வெல் தாலுகாவில் உள்ள மும்பை- கோவா நெடுஞ்சாலையில் தாரா கிராமம் அருகே நேற்று முன்தினம் மாலை முதல் கார் ஒன்று நின்றது. வெகுநேரமாக நின்றதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் காரின் அருகே சென்று பார்த்தனர். அப்போது காருக்குள் ஒருவர் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இது பற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காரில் உள்ளே கிடந்த நபரின் உடலை மீட்டனர். இதில் மார்பில் காயங்கள் இருந்தது.

போலீசார் விசாரணை

மேலும் விசாரணை நடத்தியதில், பிணமாக மீட்கப்பட்டவர் புனே தலேகாவை சேர்ந்த சஞ்சய் கல்ரா என அடையாளம் காணப்பாட்டனார். இருப்பினும் கார் அவருக்கு சொந்தமானது அல்ல எனவும் பிம்பிரி சிஞ்ச்வாட் பகுதியை சேர்ந்த கார் எனவும் தெரியவந்தது.

மேலும் அவர் பழைய கார்களை விற்பனை செய்து வியாபாரி எனவும் இவர் அவற்றில் ஒன்றை விற்பனைக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்