பெஸ்ட் பஸ்கள் மோதி சாலையில் நடந்து சென்றவர் பலி

Update:2023-06-04 00:15 IST

மும்பை, 

மும்பை மாநகராட்சி சார்பில் இயக்கப்பட்டு வரும் பெஸ்ட் பஸ் ஒன்று நேற்று காலை 6 மணி அளவில் பாட்டியா பாக் நகரில் இருந்து பேக்பே பணிமனைக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது பத்வார் பூங்கா அருகே வந்தபோது, அங்கு நின்று கொண்டிருந்த மற்றொரு பெஸ்ட் பஸ் மீது மோதியது. இதனால் விபத்தில் சிக்கிய பஸ் முன்னோக்கி சென்று அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 6 இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. அப்போது அந்த வழியாக நடந்து சென்ற 40 வயது நபர் பஸ்சின் முன்னாள் சிக்கி 100 அடி தூரம் இழுத்து செல்லப்பட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கப்பரேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்